உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதலை தொடுத்துவரும் நிலையில், உக்ரைனுக்கு மேலும் 31 மில்லியன் டொலர்களிலான உதவிப் பொதியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.உக்ரைனின் எரிசக்தி மற்றும் மனிதாபிமான தேவைகளுக்காகவே குறித்த உதவி வழங்கப்படுகின்றது.உக்ரைனுக்கு நிலக்கரியை அனுப்புவதைவிட எரிசக்தி தேவைப்பாட்டுக்கு நிதி உதவி வழங்கும் முடிவு சிறந்தது என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மின்உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல் தொடுத்துவருகின்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிடம் உக்ரைன் நிலக்கரி உதவி கோரி இருந்தது.உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து ஆஸ்திரேலியா 70 ஆயிரம் டொன் நிலக்கரியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.ஐரோப்பாவில் குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெப்பமேற்றம் மற்றும் மின் தேவைக்காக ஆஸ்திரேலியாவால் வழங்கப்படும் நிதி பயன்படுத்தப்படவுள்ளது.