Thursday, January 23, 2025
HomeLatest Newsஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன் மூலம் தற்போது அவரது சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் இராணுவ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளது.

அதன்படி, அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மார் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Recent News