Wednesday, December 25, 2024
HomeLatest Newsபள்ளிவாசல் மீது தாக்குதல் -திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்..!

பள்ளிவாசல் மீது தாக்குதல் -திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்..!

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தபட போவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் கண்டி, அக்குரணை பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் , இராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பாகற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அக்குரணை மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமது கட்டளையை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News