வடக்கு இஸ்ரேலில் உள்ள உளவுத்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் செட்டில்மென்ட் பகுதிகள், ராணுவ இடங்கள்,உளவு மையங்கள், தாக்குதல் மையங்கள், என 7 இடங்களில்ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் வடக்கு எல்லை பகுதியில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயுதங்கள் சரியாக இலக்கை தாக்கியதாக ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமைடாய்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. லெபனான் எல்லையில் இருந்து ஹெஸ்புல்லா நடத்திவரும் தாக்குதல்களால் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறியதுடன் மீண்டும் அங்கு வரும் எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 90 ஆண்டுகளாக நடைபெற்று வந்த டெல்ஹாய் செர்மனி யூத நிகழ்ச்சி முதன் முறையாக ரத்து செய்யபட்டுள்ளது. டெல்ஹை என்ற இடத்தில்,1920 ஆண்டு முதன் முதலாக யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் சண்டைவெடித்தது. அப்போது கொல்லப்பட்ட யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக டெல்ஹைய் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது ,முதன்முறையாக அந்த நிகழ்ச்சி ஹெஸ்புல்லா தாக்குதலினால்
நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.