Thursday, December 26, 2024
HomeLatest Newsவடமாகாணத்தில் சேவையில் ஈடுபட்ட பேரூந்து மீது தாக்குதல்

வடமாகாணத்தில் சேவையில் ஈடுபட்ட பேரூந்து மீது தாக்குதல்

வடக்கு, கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது
உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது பேருந்தின் முன்  கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Recent News