Tuesday, December 24, 2024
HomeLatest Newsகால்களால் அம்பெய்து சாதிக்கும் பரா ஒலிம்பிக்கின் வீராங்கனை...!

கால்களால் அம்பெய்து சாதிக்கும் பரா ஒலிம்பிக்கின் வீராங்கனை…!

ஜம்மு கஸ்மீரின் கிஷ்த்வார் மாவட்டதனதச் சேர்ந்த ஷீதர் சிறு வயதிலிருந்தே இரண்டு கைகளையும் இழந்த நிலையில் மகளிருக்கான பரா ஒலிம்பிக் பாட்டியில் கால்களால் அம்பெய்யும் வில்வித்தை வீராங்கனையாக சாதிக்கக் காத்திருக்கின்றார்.
இவரின் தந்தை விவசாயி. தாய் இல்லத்தரசி. இவர் 16 வயதுக்குள்ளாகவே பல பட்டங்களை வென்றுள்ளார்.

ஷீதரின் பயிற்றுவிப்பாளர் இவரின் திறமைகளைப் பற்றி கூறுகையில் ;
தன்னிடம் பயிற்சிக்கு வந்து 11 மாதங்கள் நிறைவுபெற்றுள்ளதாகவும் ஆரம்பத்தில் பயிற்சிக்கு வரும் போது எவ்வாறு கைகளற்ற நிலையில் அம்பெய்வார் என்ற சந்தேக நிலை எனக்கு காணப்பட்டது. அவருக்கு வில்வித்தையை பயிற்சிவிப்பது எனக்குச் சவாலாக இருந்தது. கைகளற்ற இவருக்கு வில்வித்தையைப் பயிற்றுவிக்கவெனவே ஒரு உபகரணத்தை உருவாக்கி இரண்டு மாதங்கள் கடுமையாக உழைத்தேன்.

இதன் மூலமாக உலகிலேயே கால்களால் அம்பெய்யும் முதல் வில்வித்தை வீரராக உருவெடுத்துள்ளார். 11 மாதங்களில் சர்வதேசப் போட்டிகளில் தங்கம் , வெள்ளி , வெண்களப் பதக்கங்களென 3 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை ஆசியப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில் அடுத்து நடைபறவுளள பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளா். அப்பாட்டியிலும் பதக்கத்தை சுவீகரிப்பார் என நம்புகின்றேன் என அவரது பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News