வாழ்நாள் கனவை நனவாக்கும் தருணத்தில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த 63 வயதான பீட்டர் ஸ்வாட் எவரஸ்ட் மலையின் உச்சியை அடைந்து விட வேண்டும் என்பதனை தனது குறிகோளாக கொண்டு வாழ்ந்துள்ளார்.
பீட்டர் ஸ்வாட் தனது கனவை நிறைவேற்றும் நோக்கில் எவரஸ்ட் மலையின் உச்சியினை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 மீற்றர் உயரத்தில், சுவாசப் பை பிரச்சினை காரணமாக ஸ்வாட் உயிரிழந்துள்ளார்.
தனது ஒன்பது வயது முதலே எவரஸ்ட் மலை உச்சியை அடைய வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர் என ஸ்வாட்டின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்வாட், உலகின் பல்வேறு மலைகளின் உச்சியை அடைந்துள்ளார் என்பதுடன் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.