Thursday, January 23, 2025
HomeLatest News59 வயதில் அடுத்த திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட அமேசான் நிறுவுனர்...!

59 வயதில் அடுத்த திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட அமேசான் நிறுவுனர்…!

அமேசான் நிறுவுனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரென் சன்செஸ் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

இந்த நிலையில், சன்செஸ் கையில் இதய வடிவ மோதிரத்தை அணிந்து இருப்பதை தொடர்ந்து, இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

முன்னாள் செய்தியாளரான லாரென் சன்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஜோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். எனினும், இது பற்றிய தகவல்கள் 2019 ஆண்டு ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் இடையே விவாகரத்து நடக்கும் வரை வெளியில் தெரியாத ரகசியமாக பேணப்பட்டது.

ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்சி ஸ்காட் தம்பதி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், இவர்களிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

விவாகரத்து வழங்குவதற்காக மெக்கன்சி 38 பில்லியன் டொலர்களை ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டமையால் அதன் மூலம் அவர் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News