Sunday, February 23, 2025
HomeLatest Newsஅத்துகோரல எம்.பி கொலை; மேலுமொருவர் கைது

அத்துகோரல எம்.பி கொலை; மேலுமொருவர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர் நிட்டம்புவ – ஓவிட்டவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News