ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸ் டி கிச்னர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த, இச் சம்பவத்தில் துணை ஜனாதிபதியை நோக்கிய துப்பாக்கியை நீட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுவதையும் அவ்வேளை நபர் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் பிரேசிலை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வரும் வழியில் துணை ஜனாதிபதி இந்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.
2007 முதல் 2015 வரை ஆர்ஜென்டீனாவின் ஜனாதிபதியாகவும் அதற்கு முதல் பெண்மணியாகவும் விளங்கிய இடதுசாரி அரசியல்வாதியை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து துப்பாக்கியை ஏந்திய நபர் துணை ஜனாதிபதியை நோக்கி வருவதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.