உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டை வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்தும் 5 ஆவது ஆண்டாக ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆசிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தையும் அதன்பின்னர் ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பற்ற கடவுசீட்டை வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இறுதி இடத்திலும் பாகிஸ்தான் 106 ஆவது இடத்திலும் இலங்கை 100 ஆவது இடத்திலும் உள்ளன.