Wednesday, December 25, 2024
HomeLatest Newsஆயிஷாவை வாடி, போடி எனத் திட்டிய அசீம்... பிக்பாஸ் வீட்டுக்குள் மூண்ட சண்டை... வெளியானது முதல்...

ஆயிஷாவை வாடி, போடி எனத் திட்டிய அசீம்… பிக்பாஸ் வீட்டுக்குள் மூண்ட சண்டை… வெளியானது முதல் ப்ரோமோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில், அதில் 21 ஆவது போட்டியாளராக மைனா நந்தினியும் இணைந்து கொண்டார். இப்போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் ராங்கிங் பிரகாரம் நிற்குமாறு பிக்பாஸ் கூறுகின்றார். அதில் அசீம் கருத்துக் கூறுகின்றார். அதாவது தகுதி இல்லாத பல பேர் நிற்பதாகவும், அதில் 9 ஆம் இலக்கத்தில் நின்ற ஆயிஷாவை பார்த்து “சுத்தமாகவே தகுதி இல்லாத ஆளு” என்று கூறுகின்றார்.

அதனைத் தொடர்ந்து நான் எந்த விதத்தில் தகுதி இல்லாத ஆளு எனக் கேட்டு சண்டையை ஆரம்பிக்கின்றார் ஆயிஷா. அதற்கு உடனே அசீம் “நீ தூக்கத்தை தவிர வேற என்ன தான் பண்ணி இருக்காய்” எனக் கேட்கின்றார். உடனே ஆயிஷா “நீங்க மட்டும் தூங்கலயா” எனப் பதிலுக்கு கேட்கின்றார்.

அவர்கள் இருவருக்கும் இடையில் வாய்க்கலப்பு பெரிதாக ஆரம்பிக்க தொடங்குகின்றது. அசீம் ஆயிஷாவை வாடி போடி என்ற வார்த்தைகளால் திட்டுகின்றார். பதிலுக்கு ஆயிஷாவும் சண்டை போடுகின்றார். பொறுத்து இருந்து பார்ப்போம் என்னதான் நடக்கு என்று.

இதோ அந்த முதலாவது ப்ரோமோ வீடியோ..!

Recent News