Sunday, February 23, 2025
HomeLatest Newsமுதல் முறை குழந்தையை காட்டிய ஆர்யா - சாயிஷா! வைரலாகும் கியூட் புகைப்படம்

முதல் முறை குழந்தையை காட்டிய ஆர்யா – சாயிஷா! வைரலாகும் கியூட் புகைப்படம்

ஆர்யாவின் பிறந்தநாள் அவரின் வீட்டில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கணவர் ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து சாயிஷா தங்களின் மகளின் முகத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

கடந்த சில தினங்கள் முன் டெல்லி சென்றிருந்த நடிகை சாயிஷா, இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் குழந்தையின் முழு முகம் தெரியாமல் இடது ஓரம் மட்டும் தெரிவது போல அமைந்திருந்தது.

இந்த நிலையில், தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து ஆர்யா, சாயிஷா மற்றும் குழந்தை ஆரியானா ஆகியோர் இருக்கும் புகைப்படமும், ஆர்யா மற்றும் குழந்தை ஆரியானா இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே!. நீங்கள் ஒரு சிறந்த கணவர், தந்தை மற்றும் சிறந்த மனிதர்.நீங்கள் எங்கள் வாழ்வில் உள்ளதை பெரும் பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம்.

என்னுடையதாக இருப்பதற்கு நன்றி. நான் என்றென்றும் உங்களை நேசிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யா – சாயிஷா தம்பதியரின் மகள் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் சாயிஷாவை உரித்து வைத்து மகள் இருப்பதாக புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Recent News