Thursday, January 23, 2025
HomeLatest Newsகைதான பெங்களூரு தீவிரவாதிகள்- வெளுத்துவாங்கிய சக கைதிகள்..!

கைதான பெங்களூரு தீவிரவாதிகள்- வெளுத்துவாங்கிய சக கைதிகள்..!

பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்த வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி டி.நசீர் மீது மத்திய சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார், 5 பேரை கடந்த 18-ம் தேதி கைது செய்தனர்.

அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 12 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 5 வாக்கி டாக்கி, 7 துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், 4 கையெறி குண்டுகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள், கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 5 பேரையும் தனித்தனியாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News