Friday, November 15, 2024
HomeLatest NewsWorld Newsசிரிய அதிபருக்கு பிடியாணை - பிறப்பித்தது பிரான்ஸ்..!

சிரிய அதிபருக்கு பிடியாணை – பிறப்பித்தது பிரான்ஸ்..!

கட்டட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் – கைகளால் தோண்டி எடுக்கும் அவலம்..!

எங்கு பார்த்தாலும் கட்டட இடிபாடுகளாக காட்சியளிக்கின்றன. தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இரண்டு முறை மட்டுமே மனிதாபிமான உதவிகள் காசா சென்றடைய இஸ்ரேல் அனுமதி அளித்தது.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து பணிகளும் தொய்வடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை உறிவினர்கள் மீட்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்கள் எரிபொருள் இல்லாமல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் இரும்பு கம்பிகளை கொண்டு இடிபாடுகளை நீக்கி வருகிறார்கள். பலர் எந்தவித உதவிப் பொருட்களும் இல்லாததால், கைகளால் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உடல்களை வெளியே எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து சில தினங்கள் ஆகியுள்ள இடங்களில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் சகித்துக் கொண்டு எப்படியாவது உறவினர்களின் உடல்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் பரிதவித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது.

சர்வதேச சமூகத்தால் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களால் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிரிய குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டி சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், அவரது சகோதரர் மற்றும் இரண்டு மூத்த சிரிய அரசாங்க இராணுவ அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சர்வதேச கைது பிடியாணையை பிறப்பித்துள்ளது.

அசாத் தவிர அசாத்தின் சகோதரர் மஹிர் மற்றும் சிரிய அரசாங்க இராணுவ ஜெனரல்கள் கஷான் அப்பாஸ் மற்றும் பஸ்சம் அப் ஹாசன் ஆகியோருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டபோது அதிபர் ஆசாத்தின் அறிவுறுத்தலின் பேரில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி சிரிய அரசுப் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சர்வதேச சிவில் உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இரசாயன ஆயுதத் தாக்குதலால் சிரியாவின் டோரம் நகரில் ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததாக சிவில் உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Recent News