Saturday, January 25, 2025
HomeLatest Newsவிசேட பிரிவுக்கு 750 ட்ரோன்கள் கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு!

விசேட பிரிவுக்கு 750 ட்ரோன்கள் கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு!

இந்தியாவின் அவசர கால ஆயுத தேவைகளுக்கான கொள்வனவு அனுமதிகள் இன் கீழ் 750 ட்ரொன்களை விசேட படைப் பிரிவுகளுக்கு கொள்வனவு செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த droneகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் பரா படைகள் என அழைக்கப்படும் பரசூட் படைகள், எதிரிகளின் எல்லைக்குள் சென்று தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய தேவையில் உள்ளதால், இவர்களிற்கு எதிரி எல்லைக்குள் நுழையக் கூடிய ஆளில்லா ரிமோட் control drone கள் தேவைப்படுகின்றன.

கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ள RPAV வகை drone கள், இரவிலும் பகலிலும் செயற்படக்கூடியனவாக உள்ளதோடு, இவை எதிரி இலக்குகளின் 3d படங்களை காட்சிப்படுத்த கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் எதிரிகளின் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பு நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என இராணுவத்தின் விசேட பிரிவு குறிப்பிடுகிறது.

Recent News