Tuesday, May 13, 2025
HomeLatest Newsயானை தாக்கி இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழப்பு

யானை தாக்கி இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழப்பு

யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மதுருஓயா இராணுவப் பயிற்சி முகாமைச் சேர்ந்த 19 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இராணுவ பயிற்சி குழுவொன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் காட்டு யானை குறித்த இராணுவ வீரரைத் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Recent News