Thursday, January 16, 2025

மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது!

அனுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்குள் 15 வயது மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ வீரரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இராணுவ வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை நடத்திய பொலிஸார் சந்தேக நபரான இராணுவ வீரரை கைது செய்துள்ளனர்.

பாடசாலை நேரம் முடிந்த பின்னர், இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Latest Videos