Thursday, January 23, 2025
HomeLatest Newsபச்சை பாதாம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இது என்னென்ன அதிசயங்களை செய்யும்னு தெரிஞ்சிக்கோங்க!

பச்சை பாதாம் சாப்பிட்டு இருக்கீங்களா ? இது என்னென்ன அதிசயங்களை செய்யும்னு தெரிஞ்சிக்கோங்க!

உடல் எடையை குறைக்கவும் ஆரோக்கியத்திற்காகவும் ஒவ்வொரு நாளும் ஊறவைத்த பாதாமை பெரும்பாலான மக்கள் உட்க்கொள்கிறார்கள். 

ஒவ்வொரு நாளும் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதன் நன்மைகளை பல ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணர்கள் நமக்கு கூறிவருகின்றனர். 

ஆனால், நீங்கள் பச்சை பாதாமை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? ஆம், பச்சை பாதாமில் கூட அதன் ஊட்டச்சத்து அளவு எங்கும் குறையாமல் அப்படியே இருக்கிறதாம். 

உடல் எடையை குறைப்பதில் இருந்து சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி வரை உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அது வழங்குகிறது. பச்சை பாதாம் என்பது இனிப்பு பாதாம் மரத்தின் முதிர்ச்சியடையாத பழங்கள் ஆகும். அவை மென்மையாக, காயாக இருக்கும் போது அறுவடை செய்யப்படுகின்றன.

வெளிப்புற ஷெல் கடினமாகி, உள் கர்னல் முழுமையாக வளரும். பழைய பழங்களின் வழக்கமான ‘பாதாம் சுவை’ பச்சை பாதாமில் குறிப்பாக வலுவாக இருப்பதில்லை. 

ஆனால் அதன் வளமான ஊட்டச்சத்துகள் அப்படியே இருக்கும். பச்சை பாதம் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நார்ச்சத்து அதிகம்

இந்த சிறிய பச்சை பாதமில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. அதனால், இது மலச்சிக்கல் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், அவை செரிமானத்திற்கு சிறந்தவை மற்றும் வயிற்றின் எரிச்சலைத் தடுக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால்

ஆய்வின்படி, பச்சை பாதாமை உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது. இவை அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

பச்சை பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. மேலும் இது நல்ல ஆக்ஸிஜனேற்றமாகும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

இதயத்திற்கு ஏற்றது

பச்சை பாதாமில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற சக்தியை அதிகரிக்கச் செய்வதால், இதயச் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாகவும் இருக்கும்.

சருமத்திற்கு சிறந்தது

பச்சை பாதாம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. இது நமது தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.

முடி வளர்ச்சி

பச்சை பாதாமை நம் உணவில் சேர்ப்பது, முடி வளர்ச்சி மற்றும் அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள அதிகப் புரதச் சத்து உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களை செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தி

சிறுவயதில் இருந்தே நம் வீட்டு பெரியவர்கள் மற்றும் நிபுணர்கள் பாதாம் பருப்பை தினமும் சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்தி இருப்பார்கள், எதுவும் ஒரு காரணத்திற்காகதான் அவர்கள் செய்கிறார்கள். அம்மா, இந்த பச்சை பாதாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க உதவும். மேலும், பச்சை பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

குறிப்பு: பச்சை பாதாமை அளவோடு சாப்பிடுங்கள். உங்களுக்கு ஏதும் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளுங்கள்.

Recent News