Thursday, January 23, 2025
HomeLatest Newsவளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் உண்டா? ஜோதிட ரகசியம் இதோ

வளையல் அணிவதால் இத்தனை நன்மைகள் உண்டா? ஜோதிட ரகசியம் இதோ

ஜோதிட சாஸ்திரத்தின் படி வளையல் சுக்கிரனுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. வளையல் அணிவதால் ஏற்படும் நன்மைகள், வளையல்களின் முக்கியத்துவம் மற்றும் எந்த நிற வளையல்களை அணிய வேண்டும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

வளையல் என்பது பழங்காலத்திலிருந்தே ஒரு அலங்காரப் பொருளாக இருந்து வருகிறது. பாரம்பரியமாக, திருமணமான பெண்கள் மட்டுமே தங்கள் அன்றாட ஆபரணங்களுடன் இந்த அணிகலன்களை அணிவார்கள். தற்போது அதில் சில வண்ணமயமான வளையல்கள் இல்லாமல் பெண்களின் ஆபரணங்கள் முழுமை அடையாது.

பல வகையான வளையல்கள் உள்ளன. ஜோதிட சாஸ்திரத்தின்படி வளையல்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால் பல அற்புதமான பலன்களை அனுபவிக்க முடியும். இந்த கட்டுரையில் வளையல் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வளையல் அணிவதன் முக்கியத்துவம்

திருமணமான பெண்கள் வளையல் அணியாமல் இருந்தால் அது அசுபமானது என்று பாரம்பரியமாக கருதப்படுகிறது. ஏனெனில் வளையல் அணியாத பெண்கள், அவர்களது திருமண வாழ்க்கையையும், குழந்தைகளையும் பாதிக்கும் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள் தொடர்ந்து வளையல் அணிந்தால், அது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் நல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

​வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

வளையல் அணிவது ஒரு அலங்கார பொருளாக மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தின் பார்வையிலும் மணிக்கட்டில் வளையல்களை அணியும்போது, அது உராய்வை உருவாக்குகிறது, இது இரத்த ஓட்டம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தின் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

​பெண்களுக்கான வளையல்களின் நன்மைகள்​

வளையல் அணியாத பெண்கள் சோர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஏனெனில் வளையல்களின் நேர்மறை சக்தி உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறது.

வளையல்கள் ஒரு பெண்ணின் கணவரின் நல்வாழ்வைக் குறிக்கின்றன. அது மட்டுமல்ல. வளையல் அணிவது தம்பதியிடையே உறவை வலுப்படுத்த உதவுகிறது.

ஜோதிட ரீதியாக ஆடம்பர மற்றும் அழகு ஆகியவற்றை குறிக்கக்கூடிய கிரகமான சுக்கிரனுடன் தொடர்புடையது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிர கிரகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் வளையல் அணிவது நன்மை தரும். இது கிரகத்தை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.

கண்ணாடி வளையல்களின் நன்மைகள்

கண்ணாடி வளையல் அணிவதால் அவற்றால் உண்டாகும் நேர்மறையான விஷயங்களால் பெண்களுக்கு அதிக நன்மை பயக்கும். கண்ணாடி வளையல்கள் தங்களை சுற்றியுள்ள நேர்மறை சக்திகளை ஈர்ப்பதோடு, எதிர்மறை ஆற்றலை விலக்கவும் உதவுகின்றன.

வளையல்களின் நிறமும் முக்கியமானது

சில நிறங்களை அணிவது பெண்களுக்கு நன்மை பயக்கும். சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் மிகவும் மங்களகரமான வண்ணங்களாகக் கருதப்படுகின்றன. சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்கள் நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் தருகின்றன. இருப்பினும், இந்த நிறங்களை திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும்.

வளைக்காப்பு

கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக 7வது மாதத்திற்குப் பிறகு வளையல் அணிய வேண்டும் என்று கூறப்படுகிறது. 7 வது மாதத்திற்குப் பிறகு, குழந்தையின் மூளை அதிகமாக வளர்ச்சி அடைகிறது. கருவில் இருக்கும் குழந்தை வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காணத் தொடங்குகின்றன.

வளையல்களின் சத்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துவதால், அது தாய்க்கும், குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

Recent News