Tuesday, December 24, 2024
HomeLatest Newsஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

வேர்க்கடலையில் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நீங்கள் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு உள்ளீர்களா? ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. பல்வேறு இதய பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலையின் இந்த கார்டியோ-பாதுகாப்பு பண்புகள் நீண்ட காலத்திற்கு இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றது.

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் முயற்சிக்கு பெரும் பலம் கிடைக்கும் என்று மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேர்க்கடலையில் மிகவும் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இது அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற அனைத்து உபாதைகளை சரி செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது.

புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கின்றது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது.

வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் கலவை! இது, அதிகமாகச் உணவு சாப்பிடுவதைத் தடுக்கின்றது மற்றும் எடையை குறைக்க உதவி புரிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News