Thursday, November 21, 2024
HomeLatest Newsபனங்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பனங்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.

அதன் நன்மைகள் 

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.

ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

பனங்கிழங்கில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

ஏனெனில்  பனங்கிழங்கில் உள்ள குறிப்பிட்ட வகை வேதிப்பொருட்கள், உடலின் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே, பனங்கிழங்கால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த விருத்திக்காக பனங்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது.

தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

பனங்கிழக்கில் அதிக அளவிலான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல்களை தூர விரட்டி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

உடல் மெலிந்தவர்களுக்கு, சுலபமாக எடையை ஏற்றுவதற்கும் பனங்கிழங்கு சிறந்தது என்பதால், உடல் பருமனானவர்கள் அளவுடன் தான் பனையின் கிழங்கை சாப்பிட வேண்டும்.

அதேபோல,ப‌னங்கிழங்கு உடலுக்கு குளிர்மையைத் தரக்கூடியது என்பதால் குளிர்ச்சியான உடல் உடையவர்கள் பனங்கிழங்கை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பனங்கிழங்கு  சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை அதிகமாகலாம். எனவே  பனங்கிழங்குடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

ஆரோக்கியமான உடலைப் பெற பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்ட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும்..

வயிறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள்,பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்

இரும்பு சத்து :

இரும்புச்சத்து ஹீமோ குளோபினின் செயல் பாட்டிற்கு இன்றியமையாததாகும். மேலும் இரத்தத்தின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல அவசியமாகும். பனங்கிழங்கு பொடி இரும்பு சத்து குறைபாட்டை போக்க உதவுகிறது.

கால்சியம் :

பனங்கிழங்கில் கணிசமான அளவு கால்சியம் உள்ளது. இது தசைஇ வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கு மிகவும் அவசியம் ஆகும். மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ்இ கீல்வாதம் போன்ற வயது தொடர்பான எலும்பு கோளாறுகளைத் தடுக்கிறது.

மெக்னீசியம் :

மேலும் பனங்கிழங்கில் உள்ள மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க பயன்படுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உற்பத்தியை சீராக்க உதவுகிறது.

Recent News