Thursday, January 23, 2025
HomeLatest Newsகையால் உணவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

கையால் உணவை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது.

பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. சில பன்னாட்டு நிறுவனங்களில்… உயர்தர உணவகங்களில்… தோசையை ஸ்பூனால் சாப்பிட முயன்று, தோசையோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கலாம்.

கையால் சாப்பிட இயல்பாக, எளிதாக முடிகிறபோது ஏன் ஸ்பூனோடு மல்லுக்கட்ட வேண்டும்?, இதோடு கையால் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்ப்போமா?

உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிராக இருக்கிறதா? என எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது.

நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது. மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன.

வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

கைக்குப் பதிலாக ஸ்பூனில் சாப்பிடும்போது மூளைக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடங்க தாமதமாகும். அதுவுமல்லாமல் உணவின் தன்மை நமக்குத் தெரியாது என்பதால் சூடான பொருளை ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்தால் நாக்கை சுட்டுக்கொள்ள நேரிடலாம்.

ஸ்பூனில் சாப்பிடும்போது நமது கவனம் முழுக்க நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒருவிதமான எந்திரத்தன்மை வந்துவிடுகிறது.

இதனால் உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை. கையால் சாப்பிடும்போது ஸ்பூனில் சாப்பிடுவதை விட அதிக திருப்தி கிடைக்கிறது.

ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் மிக வேகமாகச் சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சில குறைபாடுகள் வரலாம் என கண்டறிந்திருக்கிறார்கள். சீரற்ற மனநிலை, மன அழுத்தம் போன்றவையும் இந்த நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்களாக இருக்கின்றன.

கெட்டவை விரட்டப்படும் நாம் சாப்பிடும்போது கையை வைத்திருக்கும் அமைப்பானது யோக முத்திரைகள், பழமையான நடன முறைகளின் முத்திரைகள் மற்றும் தியானத்தின் மூலம் நோயை குணப்படுத்தும் முறையை குறிக்கிறது.

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு விரலும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களைக் குறிக்கிறது. உணவில் உள்ள கெட்ட சக்திகளை இவை விரட்டுவதாக நம்பப்படுகிறது. இந்த பலன்கள் ஸ்பூனில் சாப்பிடும்போது கிடைப்பதில்லை.

Recent News