Tuesday, December 24, 2024
HomeLatest Newsவீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்!

வீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்!

பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே காரணம் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் பல அருட்தந்தைகளும், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளும் இணைந்து மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் தேசியக் கொடியையும் ஏந்தி ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News