Saturday, January 11, 2025
HomeLatest Newsரோம் நகரில் பாப்பரசரை சந்திக்கும் கொழும்பு பேராயர்

ரோம் நகரில் பாப்பரசரை சந்திக்கும் கொழும்பு பேராயர்

இத்தாலி ரோம் நகருக்கு விஜயம் செய்துள்ள கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

குறித்த சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி வத்திக்கானில் இடம்பெறவுள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.

பரிசுத்த பாப்பரசரின் விசேட அழைப்பின் பேரில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ரோம் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படிஇ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட 60 பேரின் நெருங்கிய உறவினர்கள் கொண்ட குழு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இத்தாலி ரோம் நகருக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News