வன்முறையை தூண்டி விடும் எவரும் என்னோடு இணைய தேவையில்லை அமைதியாக நேர்வழியில் இணைந்து வன்முறை இல்லாத அமைதியான நேர்வழிப் பயணத்தில் பொறுமையாக பயணிப்பது என்னுடைய விருப்பம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் நான் அந்த இடத்தை விட்டு சென்று விட்டேன் அதனால் என்னை எல்லோரும் வெறுத்தனர்.
அது, பரவாயில்லை நான் அமைதியான வழியில் போராட்டங்களை சந்திக்க தயார் அவ்வாறான பயணத்தில் இணைய விரும்புவர்கள் யாரும் என்னோடு இணைந்து கொள்ளலாம் வன்முறைகளோடு பயணிக்க நான் விரும்பவில்லை அனைவரும் அமைதியான வழியில் நேர்வழியில் சென்று அரசை வீழ்த்துவதற்கு நாம் திட்டமிட்டு இருக்கின்றோம் அவ்வாறு இணையும் எவரோடும் நான் இணைந்து செயல்பட தயார் அதை விட்டு நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு முன்னைய அரசாங்கத்தை போல் நான் செயல்பட மாட்டேன் .
கல்கமுவ, யூ .பி வன்னி நாயக்கர் தேசிய பாடசாலைக்கு 39 வது பஸ் வண்டியை நன்கொடையாக வழங்கிய பின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வன்முறைகளோடு ஒரு பொழுதும் பயணிக்க போவதில்லை அமைதியான நேர்வழியில் சென்று மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதை விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.