Wednesday, December 25, 2024
HomeLatest Newsஜனாதிபதி பதவிக்கு அனுரவின் பெயரும் முன்மொழிவு

ஜனாதிபதி பதவிக்கு அனுரவின் பெயரும் முன்மொழிவு

ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி பதவிக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News