எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலில் சுமார் 3500 மெற்றிக் தொன் எரிவாயு இருந்ததாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எரிவாயு கப்பலுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
கப்பலில் உள்ள எரிவாயு இருப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஏற்கனவே புறப்பட்டு சென்றதாக தெரிவித்த அவர், இந்த வாயு இறக்கும் பணி எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதாகவும், கடல் சீற்றம் காரணமாக அது தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, தலா 3,500 மெற்றிக் தொன் கொண்ட மேலும் இரண்டு எரிவாயு தாங்கிகள் அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் மேலும் கூறினார்.