Friday, January 31, 2025
HomeLatest Newsசீனாவில் இருந்து மற்றுமொரு புதிய வைரஸ்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சீனாவில் இருந்து மற்றுமொரு புதிய வைரஸ்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தாய்வானின் நோய் எதிர்ப்பு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாகாணங்களில் ‘லங்யா’ (“Langya”) எனப்படும் மனிதர்களைத் தாக்கும் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதைக் குறித்து சீனா இன்னும் எந்த தகவல்களும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நோய் காரணமாக தற்போது வரை சுமார் 35பேர் மேற்படி மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நோய் புதிய வைரஸ் எனவும் இதுவரை உலகில் மனிதர்களைப் பாதிக்காத ஒரு நோய் எனவும் தாய்வானின் தொற்று நோய் எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்படி வைரஸ் ஹெனிபா வைரஸ் (Henipavirus) குடும்பத்தை சேர்ந்தது என்றும், இதன் பிரிவுகள் ஹெண்ட்ரா வைரஸ் (Hendra virus ) மற்றும் நிபா வைரஸ் (Nipah virus) ஆகியன ஏற்கனவே மனிதர்களைத் தாக்கியிருக்கின்றது என்ற தகவலையும் வழங்கியுள்ளது.

இந்த தொற்று நோய்க்கு தடுப்பூசிகள் இல்லை எனவும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News