பசுபிக் பெருங்கடலின் நியூ கலிடோனியா கடற்கரையில் 7.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நியூ கலிடோனியாவின் தலைநகரான நௌமியாவில் இருந்து வடமேற்கே 261 மைல் தொலைவில், சனிக்கிழமை மதியம் (01:51 GMT) சுமார் 22 மைல் (36 கிலோமீட்டர்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி அலைகள் சாத்தியம் என்றும் ஆனால் அவை 1 அடிக்கும் (0.3 மீட்டர்) சிறிய அலைகளை உருவாக்கக் கூடும் என்றும் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக உண்டான சோத விபரங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.