Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கை அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கானை நாடாளுமன்றம் கடந்த ஆண்டு நீக்கியநிலையில், அதன் பின்னர் அவருக்கு எதிராக தேசத் துரோகம், பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டு அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது சுமார் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு வழக்கை
அந்நாட்டு தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து தேசிய ஊழல் தடுப்பு அமைப்பின் உயரதிகாரியான முஸாஃபர் அப்பாஸி அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார்.

அதில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி உள்ளிட்டோர் மீது 19 கோடி பவுண்டை அதாவது சுமாா் ரூ.2,000 கோடி ரூபாவை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக தேசிய ஊழல் தடுப்பு அமைப்பின் விசாரணை அதிகாரி உமர் நதீம் வழக்குப் பதிவு செய்துள்ளார் என்றும், இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Recent News