Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமாஸ்கோ மீது மீண்டும் தாக்குதல் - சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்..!

மாஸ்கோ மீது மீண்டும் தாக்குதல் – சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்..!

மத்திய மாஸ்கோவில் உக்ரேனிய ஆளில்லா விமானத்தை ரஷ்ய வான் பாதுகாப்பு சுட்டு வீழ்த்தியதாகவும், அதனுடைய சில துண்டுகள் ஒரு கண்காட்சி மையத்தின் மீது விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .

இன்று அதிகாலை 4 மணியளவில் குறித்த ட்ரான் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அந்தத் துணுக்குகளால் காயங்களோ தீ விபத்துகளோ ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ நகர வணிக மற்றும் அலுவலக வளாகத்தை ஒட்டிய கண்காட்சி வளாகமான எக்ஸ்போசென்டர் மைதானத்தில் சில துண்டுகள் விழுந்ததாக மேயர் செர்ஜி சோபியானின் கூறினார்.

அத்தோடு இந்த கண்காட்சி வளாகம் கடந்த மாதத்தில் இரண்டு முறை ட்ரோன்களால் தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News