இந்த வருடத்தில் 93 மில்லியன் தென்னங்கன்றுகளை விலங்குகள் சேதப்படுத்தியள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 28 உணவுப் பயிர்களின் 144,989 மெற்றிக் தொன் உற்பத்திகளும் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாய ஆராய்ச்சி , வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
அழிக்கப்பட்ட உணவுப் பயிர்களின் பெறுமதி 30,215 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளின்படி, வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகம், வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க ஒரு குழுவை நியமிக்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.