Thursday, January 23, 2025
HomeLatest Newsவிலங்குகளின் கொழுப்பு எரிபொருளால் மிகப் பெரும் பாதிப்பு...!ஆய்வில் முடிவு..!

விலங்குகளின் கொழுப்பு எரிபொருளால் மிகப் பெரும் பாதிப்பு…!ஆய்வில் முடிவு..!

இறந்த கோழிகள் , பன்றிகள் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று ஓர் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி விமானப் போக்குவரத்திற்கான எரிபொருளைத் தயாரிக்கும் பொழுது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயுவே வெளியேறும்.

அந்த வகையில் விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என கருதப்படுகின்றது.

இந்நிலையில், விமானப் போக்குவரத்திற்கு இந்த எரிபொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் ஏனைய தொழில் துறைகளுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்காது என்பதால் அந்த துறைகளிற்கு பனை எண்ணெய் பயன்படுத்தப்படும் நிலை உருவாகும் என்பதுடன் அதனால், பல மடங்கு கரிம வெளியேற்றம் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்தும் விமானங்கள் அதிக அளவு கரிம வாயுவை வெளியேற்றுவதால் அதைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் விமானப் போக்குவரத்துத் துறையுள்ளது.

இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் நகரில் கரிமம் இல்லா போக்குவரத்து என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வரும் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பு ஒன்றின் ஆய்வில், விமானப் போக்குவரத்துத் துறை பயன்படுத்தும் எரிபொருட்களைத் தயாரிக்கும் அளவிற்கு , ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Recent News