பொதுவாக பெண்களை குறி வைக்கும் நோய்களில் குருதிச்சோகை முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்நோயானது நூற்றுக்கு ஆறுபது சதவீதமான பெண்களுக்கு இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மாதவிடாய் நேரத்தில் அதிகப்படியான இரத்த போக்கின் விளைவாக ஏற்படுகிறது. மேலும் இந்நோய் நிலைமை இருப்பதை சில அறிகுறிகள் வதை்து கண்டுபிடிக்கலாம்.
அதிகமான சோர்வு
பலவீனம் உணர்வு
தலைசுற்றல்
மூச்சுத் திணறல்
அந்த வகையில் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், இதனை சரிச் செய்யக்கூடிய உணவுகள் என்பன குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
மனித உடலிலுள்ள குருதிக்கு சிவப்பு நிறத்தை தரக்கூடிய ஹீமோகுளோபின் அளவு குறையும் போது குருதிச்சோகை நோய் ஏற்படுகிறது.
தடுக்கும் உணவுகள்
புரோபயாட்டிக் உணவுகள்
புரோபயாட்டிக் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இரத்தசோகை நோயை எளிய முறையில் குணப்படுத்த முடியும்.
உதாரணமாக தயிருடன், மஞ்சள் சேர்த்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிடும் போது இதிலிருக்கும் பக்ரீயாக்கள் குடற்புண்கள் சரிச் செய்கிறது.
பச்சை நிற இலைகள் மற்றும் காய்கறிகள்
கீரைகள், செலரி, கடுகு கீரைகள், ப்ரக்கோலி, பச்சை நிற காய்கறிகள் போன்றவற்றில் குளோரோஃபில் அதிகமாக உள்ளது.
இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்த சோகை பிரச்சினையுள்ளவர்களின் இரத்தயோட்டமாக சீர்ப்படுத்தப்படும்.
மேலும் உடலுள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் இதனால் சோம்பல் சரிசெ் செய்யப்படுகிறது.
வேர்கொண்ட காய்கறிகள்
வேர்கொண்ட தாவரங்களில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.
உதாரணமாக கேரட், பீட்ரூட், இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை கூறலாம்.
இதனை சூப் மற்றும் கஞ்சி வகைகள் செய்து பருகலாம் இது உடல் சோர்வை இல்லாமலாக்கி உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது.
மேலும் பீட்ருடில் அதிகமான இரும்பு, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது இரத்தயோட்டத்தை அதிகப்படுத்துகிறது.
உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள்
பொதுவாக உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகளில் அதிகப்படியான தாதுப் பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்கிறது.
இது இரத்ததிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை மெருகூட்டுகிறது. உதாரணமாக அத்தி. பேரீச்சை, ஆப்ரிகாட் என்பவற்றைக் கூறலாம்
இதிலுள்ள வைட்டமின் சி ,ஃபோலேட், மெக்னீசியம் சத்துக்கள் குருதி சோகை நோய் குணமாக்க உதவுகிறது.