Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsகல்யாணக் கனவுடன் தாயகம் திரும்பவிருந்த இந்தியப் பெண்...!லண்டனில் நேர்ந்த சோகம்...!

கல்யாணக் கனவுடன் தாயகம் திரும்பவிருந்த இந்தியப் பெண்…!லண்டனில் நேர்ந்த சோகம்…!

தனது திருமணத்திற்காக தாயகம் திரும்ப இருந்த நிலையில் இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவரும் மேற்படிப்பின் நிமித்தம் 3 ஆண்டுகளிற்கு முன்னர் லண்டனுக்கு சென்றவருமான 27 வயதான தேஜஸ்வினி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேஜஸ்வினி மேற்படிப்பை நிறைவு செய்த நிலையில் லண்டனின் வெம்ப்லே என்ற பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்து தற்காலிகமாக வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

அவர்களுடைய வீட்டிற்குள் நேற்று முன்தினம் கத்தியுடன் நுழைந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கெவன் அன்டோனியோ(23) என்ற இளைஞர் இரு பெண்களையும் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்த வேளை, தேஜஸ்வினி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் மற்றைய பெண்ணை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய அந்த இளைஞரையும் சந்தேகத்தின் அடிப்படையில் மற்றுமொரு இளைஞரையும் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு நாடு திரும்பவுள்ள நிலையில் மகள் இறந்த செய்தி கேட்டு ஐதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து அவரது தந்தை, 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்ற அவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐதராபாத் வந்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே அவர் லண்டன் புறப்பட்டு சென்று விட்டார்.

கடந்த மாதம் அவர் ஐதராபாத் வருவதாக இருந்தார். அவருக்கு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் திருமணம் நிச்சயம் ஆனதும் இந்தியாவிற்கு வருவதாக கூறிவிட்டு அங்கிருந்தார். இந்நிலையில், மகள் விரைவில் இந்தியா வரவிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தேஜஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை இங்கிலாந்தில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யும்மாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது திருமணத்திற்காக தாயகம் திரும்ப இருந்த நிலையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent News