Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலரின் அளவு அதிகரிப்பு

இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலரின் அளவு அதிகரிப்பு

கடந்த மாதத்தில் இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் அளவு 359 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் செப்டெம்பர் மாதத்தில் 359 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

Recent News