Friday, December 27, 2024
HomeLatest NewsIndia Newsதமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தகவல் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சுமார் 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய தினம் (09.05.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் அலி சப்ரி மேற்கண்ட விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருகின்றது. இவ்வாறான அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ சுமார் 92,435 இலங்கையர்கள் தங்கியுள்ளனர்.

தமிழக அகதி முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியுள்ளனர்.

சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 34,000 இலங்கையர்கள் இந்தியாவில் வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். அத்தகைய நபர்கள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நியமிக்கப்பட்ட அகதி முகாம்களுக்கு வெளியே உள்ள வளாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பெருமளவான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கைக்குத் திரும்ப விரும்பும் நபர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, ​​வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான தமது பரிந்துரைகள் மற்றும் தேவைகளைச் சமர்ப்பிக்க முடியும்.

தமிழகத்தில் பல தசாப்தங்களாக எஞ்சியுள்ள இலங்கையர்களைப் பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதற்கு தற்போதைய நிர்வாகம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News