வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தான் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நிலத்தடி தங்கச் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர்.
திடீரென மண் சரிந்ததில் அங்கிருந்த தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி 22 பேர் வரை மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை நடைபெற்று வருவதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாத காரணத்தால் சீனாவில் சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்வதும் உயிர்சேதமும் தொடர்ந்தவண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.