Thursday, January 23, 2025
HomeLatest Newsஅவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த விருது!

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு கிடைத்த விருது!

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வஜிர ஜயசூரிய, 2022 ஆம் ஆண்டின் சிறந்த கணக்காளருக்கான கௌரவ விருதை அவுஸ்திரேலியாவில் அண்மையில் பெற்றுள்ளார்.

அவர் அரச கணக்காளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிறந்த கணக்காளர் விருதைப் பெற்றார், இது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தனது சாதனை குறித்து பேசிய வஜிர ஜயசூரிய, இலங்கையர் ஒருவர் இந்த விருதை வெல்வது இதுவே முதல் முறை என்றார். 

45 வயதான இலங்கைக் கணக்காளர் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறந்த கணக்காளர் விருதையும் பெற்றுள்ளார். 

குயின்ஸ்லாந்தில் உள்ள கணக்காளர் நிறுவனத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட கணக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 6000 என்று ஜெயசூரிய கூறினார்.

ஆறு மாநிலங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு சிறந்த கணக்காளர்களில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கான ஆண்டின் சிறந்த கணக்காளராக வஜிர ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

50,000 க்கும் மேற்பட்ட கணக்காளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட நாட்டில் கணக்காளர்களைப் பதிவு செய்யும் மூன்று நிறுவனங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் பொதுக் கணக்காளர்கள் நிறுவனம் (IPA) இந்த விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

1977 ஆம் ஆண்டு கிரிபத்கொடவில் பிறந்த வஜிர ஜயசூரிய இலங்கையின் பல பாடசாலைகளில் கல்வி கற்று தனது க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்காக கண்டி தர்மராஜா கல்லூரியில் பயின்றார். 

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார், பின்னர் அவர் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து கணக்கியலில் தகுதி பெற்றார்.

Recent News