அவுஸ்ரேலியாவின் சிட்னி மாநகரில் பாரம்பரிய பழங்காலத்து வீடு ஒன்று தீடிரென ஏற்பட்ட தீ விபத்தினால் முற்றாக அழிந்து நாசமாகியுள்ளதாக அவுஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வீடு அவுஸ்ரேலியாவின் பயணத் துறை நிபுணராண “டோயென் மேரி ரோஸிக்கும்” அவரது கணவரான “தியோ ரோஸ்ஸிக்கும்” சொந்தமானது எனவும் இவர்கள் இருவரும் தமது நண்பர்களுடன் சேர்ந்து 1961ம் ஆண்டில் 16,500 பவுண்ஸ் பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி இல்லத்தின் தற்போதைய பெறுமதி சுமார் 24 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இல்லம் பழங்காலத்து நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.