Friday, January 24, 2025
HomeLatest Newsஉலகில் மிக நீண்ட பாதங்களை கொண்டவர் இவர் தான்! கின்னஸ் சாதனையை படைத்த பெண்

உலகில் மிக நீண்ட பாதங்களை கொண்டவர் இவர் தான்! கின்னஸ் சாதனையை படைத்த பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட பாதங்களைக் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் தான்யா ஹெர்பர்ட்(39). சுமார் 6 அடி உயரம் கொண்ட இவரது வலது பாதம் 13.03 அங்குலம், இடது பாதம் 12.79 அங்குலம் ஆகும்.

இவர் தான் உலகின் மிகப்பெரிய பாதங்களைக் கொண்டவர் என தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தான்யா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

Guinness World Records தனது ட்விட்டர் பக்கத்தில் தான்யா குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தனது இரண்டு பாதங்களின் உயர வித்தியாசத்தினால் தான் படும் இன்னல்கள் குறித்து தான்யா கூறுகையில்,

‘ஒன்லைனில் நான் காணக்கூடிய மிகப்பெரிய காலணிகளை வாங்கி, அவற்றைக் கையாள்வதன் மூலம், அவற்றை கொஞ்சம் நீளமாக நீட்டி என் கால்களுக்கு பொருந்தும் வகையில், அவற்றை கொஞ்சம் அகலமாக்குவேன்’ என தெரிவித்துள்ளார்.

Recent News