Thursday, January 23, 2025
HomeLatest Newsதிருக்குறளின் சிறப்பை தமிழில் விளாசிய அமெரிக்கர்-மிரண்டு போன தமிழர்கள்..!

திருக்குறளின் சிறப்பை தமிழில் விளாசிய அமெரிக்கர்-மிரண்டு போன தமிழர்கள்..!

தமிழ்­மொ­ழி­யில் பொதிந்­துள்ள அழகினை மிக எளி­மை­யான பாணி­யில் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த தமிழ் புல­மை­யு­டைய ஒருவர் வியந்து பேசியுள்ளமை அனைவராலும் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் ஹிட்­டோஷி புரூக்ஸ்மா என்பவரே இவ்வாறு உல­கப் பொது­ம­றை­யா­கப் போற்­றப்­படும் திருக்­கு­ற­ளை­யும் தமிழ்­மொழி சார்ந்த கருத்­து­க­ளை­யும் சிறப்­பாக எடுத்­து­ரைத்­துள்ளார்.

திருக்­கு­ற­ளில் அழகு என்ற தலைப்­பில் தேசிய நூலக வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில், சிங்­கப்­பூ­ரின் மிகப் பெரிய தமிழ் இலக்­கிய தொகுப்­பான தமிழ்ச் சோலை­யின் முத­லாம் ஆண்டு நிறைவு விழா உட்­லண்ட்ஸ் வட்­டார நூல­கத்­தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

அதில் கலந்து கொண்ட போதே புரூக்ஸ்மா இவ்வாறு உரையாற்றியுள்ளார். அந்த நிகழ்வில் 100 ற்கும் மேற்­பட்ட பார்­வை­யா­ளர்­கள் கலந்­து கொண்டுள்ளனர்.

ஜப்­பா­னிய அமெ­ரிக்­க­ரான தாமஸ், தமிழ்­மொ­ழி­யில் சர­ள­மா­கப் பேசியும் திருக்­கு­றள் பற்றி உரை­யாற்­றி பார்­வை­யா­ளர்­களை வியப்­பில் ஆழ்த்­தி­யுள்ளார்.

தமிழ்­மொ­ழி­யின் அழகை இளையவர்களிற்கு சுவா­ர­சி­ய­மாக எடுத்­துக்­ கூறினால் அவர்­க­ளின் மொழிப் பழக்­கத்தை அதி­க­ரிக்­க­லாம் எனவும் திருக்­கு­றள் ஒவ்­வொன்­றும் நம் வாழ்­க்கைக்­குப் பொருந்­தும் எனவும் பெரு­மையுடன் கூறியுள்ளார்.

தமிழ் இனத்­தைச் சாரத ஒரு­வர் நம் மொழியை சிறப்­பாகக் கற்­றுப் பேசும்­ போது, தமி­ழ­ரா­கப் பிறந்த நாம் தமி­ழில் பேச தயங்­கக் கூடாது என்­ப­தற்கு புரூக்ஸ்மா ஒரு சிறந்த எடுத்து காட்டு என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recent News