Friday, May 3, 2024
HomeLatest Newsரஷ்யாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குரல் கொடுக்க தயாராகும் அமெரிக்கர்.

ரஷ்யாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குரல் கொடுக்க தயாராகும் அமெரிக்கர்.

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை ஒருமாதத்தை கடந்தும் தொடர்கின்றது. அதேவேளை ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைன் பொதுமக்கள் சிறுவர் பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர்.

இந் நிலையில் ரஷ்ய படைகளின் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குரல் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முற்போக்கு பெண்களின் தலைவி Ilhan Omar அமெரிக்க காங்கிரஸில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த பல நாட்களாக ரஷ்யாவின் மனிதஉரிமை மீறல்கள் உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இப்படியே போனால் மனித உரிமைகள் சட்டங்கள் இருந்தும் பயன் ஏதும் இல்லை.

எனவே உடனடியாக ரஷ்யாவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். எனவே பெண்கள் சார்பில் தனது குரல் நீதிமன்றில் ஒலிக்கும் என்றும்தெரிவித்திருந்தார்.

Recent News