Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsபேஷன் ஷோவில் ஏற்பட்ட விபத்து..!இளம் மாடல் அழகிக்கு நேர்ந்த துயர்..!

பேஷன் ஷோவில் ஏற்பட்ட விபத்து..!இளம் மாடல் அழகிக்கு நேர்ந்த துயர்..!

இரும்பு தூண் சரிந்து விழுந்ததில் இளம் மாடல் அழகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள பிலிம் சிட்டியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள ஸ்டூடியோ ஒன்றில் நேற்றைய தினம் பேஷன் ஷோ நடந்துள்ள நிலையில், அதில் பல பேஷன் மாடல்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பேஷன் ஷோவுக்கான ஒளியினை பெறுவதற்காக அங்கு பிரம்மாண்ட செட் மற்றும் மேடையும் அமைத்துள்ளனர்.

கிட்ட தட்ட 150 பேர் அந்த நிகழ்வில் இருந்துள்ள நிலையில், மதியம் 1.30 மணியளவில் வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தூண் திடீரென சரிந்து அங்கிருந்த 24 வயது மாடல் அழகி வன்ஷிகா சோப்ரா மற்றும் பாபி ராஜ் ஆகியோர் மீது விழுந்துள்ளது.

காயமடைந்த வன்ஷிகா மற்றும் பாபி ராஜ் ஆகியோரை அருகே உள்ள கைலாஷ் மருத்துவமனையில் அனுமதித்துள்ள போதிலும் வன்ஷிகா உயிரிழந்துள்ளார். பாபி ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நொய்டா பொலிஸார் விசாரணைகளை நடத்திய வேளை இந்த பேஷன் ஷோ நடத்துவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.

விழாவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் லைட் மேன்கள் நால்வரையும் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News