Monday, December 23, 2024
HomeLatest Newsகனடாவில் 83 வயது மூதாட்டிக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம்..!

கனடாவில் 83 வயது மூதாட்டிக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம்..!

கனடாவில் 83 வயதான மூதாட்டி ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் மாபெரும் பரிசுத் தொகையை வென்றெடுத்த போதிலும் அதனை அவரது உறவுகள் நம்ப மறுத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த மூதாட்டி 60 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளார். 

கிழக்கு ஒன்றாரியோவின் வென்கிலிக்ஹில்லைச் சேர்ந்த வெரா பேஜ் என்ற 83 வயதான மூதாட்டியே இவ்வாறு பரிசு தொகையை வென்றெடுத்தவர் ஆவார்.

லொத்தர் சீட்டிழுப்பில் பணப்பரிசு வென்றமை குறித்து குடும்பத்தாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் அதனை நம்பவில்லை என மூதாட்டி தெரிவித்துள்ளார். 

மகனுக்கும், மருமகளுக்கும் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றைய மருமகளிடம் தனது வெற்றி குறித்து கூறிய போது அவர் சிரித்து விட்டு, பேசாமல் உறங்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையைக் கொண்டு நல்லதொரு விடுமுறை பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், குடும்பத்தினருக்கு பணத்தை பகிர்ந்தளிக்க உள்ளதாகவும் பேஜ் தெரிவித்துள்ளார்.      

Recent News