Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia News23 பதக்கங்கள் வென்று 8 வயது சிறுவன் சாதனை..!குவியும் பாராட்டுக்கள்..!

23 பதக்கங்கள் வென்று 8 வயது சிறுவன் சாதனை..!குவியும் பாராட்டுக்கள்..!

சிறுவன் ஒருவன் 10 மாதங்களில் 23 தேசிய,சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவையை சேர்ந்த 8 வயதான ஸ்ரீசாய் குரு என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன், கிருத்திகா தம்பதியரின் இளைய மகனே ஸ்ரீசாய் குரு ஆவர்.

எட்டு வயதாகும் ஸ்ரீசாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றார்.

ஸ்ரீசாய், கடந்த 10 மாதங்களாக யோகா சாதனை மாணவி வைஷ்ணவியிடம் யோகா பயிற்சி எடுத்து வருவதுடன்,யோகாவில் மிக கடினமான விருட்ச விருட்சிகம், கண்ட பெருண்டம், சப்த திம்பாசனம், சக்ர பந்தாசனம் போன்ற ஆசனங்களையம் கற்றுக்கொண்டுள்ளார்.

அதனால், ஆரம்ப கட்ட பயிற்சி நேரங்களிலேயே தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

தற்பொழுது வரை 23 பதக்கங்களை வென்றுள்ள சிறுவன் பெரும்பாலான போட்டிகளில் முதல் பரிசையே பெற்றுள்ளார்.

மேலும் சிறுவனது திறமையினை பல்வேறு மாவட்ட நடிகர் சங்கத்தினரும் விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பத்து மாதங்களில் 23 பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்ற 8 வயது சிறுவனுக்கு அனைவரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Recent News