Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅமெ.பகிரங்க டென்னிஸ் சிட்ஸிபாஸ் தோல்வி: 2 ஆவது சுற்றுக்குள் செரீனா!

அமெ.பகிரங்க டென்னிஸ் சிட்ஸிபாஸ் தோல்வி: 2 ஆவது சுற்றுக்குள் செரீனா!

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் , முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .

இதன்படி , தற்போது நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் , கிரேக்கத்தின் முன்னணி வீரரான ஸ்டெபீ னோஸ் சிட்ஸிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இப்போட்டியில் , ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் , கொலம்பியாவின் டேனியல் எலாஹி காலனை எதிர்கொண்டார். இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக, விளையாடிய டேனியல் . 6-0 , 6-1 , 3-6 , 7-5 என்ற செட் கணக்குகளில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல, நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் , அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் , மொன் டீகார்ரோவின் டான்கா கோவினிக்குடன் மோதினார்.

இந்த தொடருடன் ஓய்வுப் பெறும் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ,இப்போட்டியில் , 6-3 6-3 என்ற நேர்செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

Recent News