சீன மற்றும் தாய்வானுக்கிடையில் தொடர்ந்து வரும் பதற்றமான சூழல்களை அவதானிப்பதற்காக அமெரிக்காவின் காங்கிரஸ் அமைப்பின் மூத்த பேச்சாளரும் இராஜதந்திர நபருமான 82 வயதுடைய நான்சி பிலோசி இந்த வாரம் தாய்வானுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பயண அறிவிப்பிற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அதேவேளை நான்சியின் வருகையை தாய்வான் வரவேற்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
‘தாய்வான் சீனாவின் கட்டுப்பாடுகளுக்குள் உள்ள ஒரு நாடு. தாய்வானுக்குள் அமெரிக்கா தேவையற்ற விதத்தில் தலையிடுகின்றது”. என சீனா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜதந்திரியாகிய நான்சி பிலோசி தாய்வானில் சீனாவின் தலையீடு எவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்துகின்றது என்பதை அவதானிப்பதோடு குறிப்பாக தாய்வானின் வான் எல்லைகளை பாதுகாப்பது குறித்தும் வான் எல்லை பாதுகாப்பு தடைகளை போடுவது குறித்தும் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.