Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகோடிக்கணக்கில் வாரிவழங்கும் அமெரிக்கா - சீனாவுக்கு பேரிடி..!

கோடிக்கணக்கில் வாரிவழங்கும் அமெரிக்கா – சீனாவுக்கு பேரிடி..!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவான் தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது.

அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது. இந்த நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய பணமதிப்பில் 4127.07 கோடி ரூபாய் ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. நவீன எஃப்-16 போர் விமானத்தின் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

சீனா அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் முந்தையதை விட நவீன ஆயுதங்களை உள்ளடக்கியதாகும். தைவானின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், அந்த நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த ஆயுதங்களை விற்பனை செய்கிறது.

சீனாவிற்கு தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். சீனாவின் வான் தாக்குதல், பிராந்தியத்தை பாதுகாத்தல், எஃப்-16 புரோகிராம் தொடர்பாக அமெரிக்காவுடன் இயங்கும் தன்மை அதிகரித்தல் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Recent News